காதல் தேர்தல்
உன் இதய தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளராகிய நான்,
உன் விழி ஓட்டு கேட்டு வீதி வழி வருகிறேன்!
ஓட்டுரிமை இல்லை என்று கூறி கதவடைப்பவளே,
கொஞ்சும் மொழிகள் கொஞ்சம் கேள்!
உன் புன்னகையே என் கொள்கை!
உன் தாவணியே என் கட்சி கொடி!
நீ குத்தும் போது வலிக்காமல் குத்தாத போது வலிக்கும் இதயம்
என் சின்னம்!
உன் பெயர் உச்சரிக்கும் இதய துடிப்பு என் பிரசார பாடல்!
உன் இதய தொகுதிக்கு என் உயிரை டெபொசிட் ஆக கட்டியுள்ளேன்!
அதற்காக வேணும் என்னை தேர்ந்தெடு கண்ணே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக