இன்று என் நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள். காந்திஜி, நேருஜி போல நமது பிறந்த நாட்களுக்கு தேசம் முழுவதும் விடுமுறை அளித்து கொண்டாட மாட்டார்கள் என்பதால் நண்பர்கள் மட்டுமாவது விடுமுறை எடுத்து கொண்டு வீட்டில் பிறந்த நாள் கொண்டாட முடிவு செய்ய பட்டது. கேக் வெட்டி, வீடு முழுவதும் மேகம் போல ஸ்பிரே அடித்து, பலூன்கள் உடைத்து, கிப்ட்கள் கொடுத்து, அனைவரும் உச்ச ஸ்தாயியில் "Happy Birthday to You" என குரூப் சிங்கர்களை போல பாடி சம்பிரதாயாமான முறையில் பிறந்த நாள் கொண்டாட தேவையான பொருட்கள் வாங்கியாயிற்று.
அப்போது பிறந்த நாள் விழாக்களின் வரலாறு பற்றி அறிய ஆவல் வந்ததால், திறந்து இருந்த லைப்ரரிக்கள், கூகிள், பிங்,எதிர் வீட்டு தாத்தா என எல்லா வித செர்ச்களிலும் தேடினேன்.

விக்கிபீடியாவின் விளக்கப்படி, "பிறந்த தேதி" என்பது ஒருவர் எந்த தேதியில் தனது பிறந்த நாளை கொண்டாகிராரோ, அந்த தேதி. இந்த விளக்கம் பற்றி நிறைய யோசித்தால் "Brain Edema" என்னும் வியாதி போல மூளை வீங்கி விடும் என்பதால் விட்டு விடலாம். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் பிடிக்கிறதோ இல்லையோ, உங்கள் பிறந்த நாளை தெரிந்தும், பிறப்பு சான்றிதழில் பதிந்தும் நிச்சயமாய் வைத்து இருக்க வேண்டும்.
ஏனென்றால், இந்தியாவை பொறுத்த வரை பிறந்த நாள் வைத்து வயது கணக்கிடுவது, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, டிரைவிங் லைசென்ஸ் வாங்க, ஓட்டு போட, திருமணம் செய்ய, சில மாநிலங்களில் மது அருந்த, கற்பழிக்க (சாதாரண ரேப் குற்றம்; மைனர் பெண்ணை ரேப் செய்தல் மகா குற்றம்; தொடர்ச்சியாக எத்தனை வருடம் களி திங்க உடம்பில் வலு உள்ளதோ, அதற்க்கு ஏற்றவாறு முயற்சிக்கவும்;) தேவை படுகிறது.மேலும், முதல் பத்தியில் பார்த்தது போல, காந்திஜி, நேருஜி, அம்பேத்கர் போன்றவர்களின் பிறந்த நாட்களால் நமக்கு விடுமுறை கிடைக்கும்.
சட்ட ரீதியானது தவிர, சமய ரீதியாகவும் பிறந்த நாள் முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்து மதத்தை சேர்ந்த பிராமணர்களுக்கு பூணுல் அணிவிக்க வயது கணக்கிட படுகிறது. கிறிஸ்தவ மதம் பிறந்த நாட்கள் கொண்டாடுவதில் முன்னோடி மதம். இம்மதத்தில் இருந்து தான் பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் வந்ததாக சில அறிக்கைகள் உள்ளன. பிறந்த நாள் அன்று ஒருவரை துஷ்ட ஆவிகள் தேடி வரும்; அவரை மற்றவர்கள் சுற்றி நின்று கை தட்டி ஓசை எழுப்பினால் அவைகள் பயந்து அவரை விட்டு ஓடி விடும் என்கிற நம்பிக்கையில் பிறந்த நாள் கொண்டாடும் நபரை சுற்றி மற்றவர்கள் கை தட்டி கொண்டாட ஆரம்பித்தனர். மற்ற படி, அப்போது "Happy birthday to you" பாடலோ, கிப்ட்கள் கொடுக்கும் பழக்கமோ இல்லை.
உலக அளவில், அறியப்பட்ட பழமையான பிறந்த நாள் கொண்டவர், சாட்சாத் இயேசு பெருமான் தான். அவரது பிறப்பை வைத்தே காலத்தினை கி.மு., கி.பி; என பிரித்துள்ளோம் என்பதை நாடறியும். ஆனால், இயேசு கிறிஸ்த்து வின் உண்மையான பிறந்த நாள் குறித்தும் மாறு பட்ட கருத்துக்கள் உள்ளன. பேகன் என்னும் மதத்தில் உள்ள ஒரு முக்கிய நாளை கிறிஸ்துவின் பிறந்த நாளாக மாற்றி விடுமுறை அளித்ததால் பேகன் மதத்தினர் அதை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர் என்று டா வின்சி கோடு புத்தகத்தில் ஒரு வரி வருகிறது. (அடடா, நாம் கூட அம்பேத்கர் பிறந்த நாள் விடுமுறை என்று தமிழ் புத்தாண்டை தானம் வார்த்தோமே)
மேலும், கிரேக்க வரலாற்றில், பிறந்த நாள் கேக்கின் மீது மெழுகுவர்த்தி ஏற்றினால், நமது பிரார்த்தனைகள் வானில் உள்ள கடவுளுக்கு வெளிச்சமாய் தெரியும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. அதை நாம் இன்று வரை பின் தொடர்கிறோம்.ஒரு பிறந்த நாள் கொண்டாடும் பழக்கத்திற்கு எவ்வளவு வரலாறு உள்ளது என்று வியப்பாகவே இருக்கிறது.
ஆதலினால், யாருக்கு பிறந்த நாள் என்றாலும் தயங்காமல் வாழ்த்து சொல்லுங்கள்; என் நண்பருக்கு மட்டும் அல்ல, இதை படிக்கும் உங்களுக்கும் இன்றோ, அட்வான்சோ, பிலேட்டடோ, பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக